உங்களுக்கு முகத்தின் ஒரு பகுதி உணர்ச்சியற்று போகிறது. நீங்கள் என்ன செய்வீர்கள்? சோர்ந்து போய் மூலையில் உட்கார்வீர்கள் அல்லது அதை நினைத்தே புலம்புவீர்கள் அல்லது அந்த பிரச்சனை இல்லாவிட்டால் இமயமலையை கால்களுக்கு கீழே கொண்டு வந்திருப்பேன் என்று வீண் ஜம்பம் செய்வீர்கள்.
உங்கள் வாழ்நாள் ஆசையை நிறைவேற்றி இருப்பீர்களா?
இதோ ஒரு இளைஞன். தன் வாழ்நாள் ஆசையான கிரிக்கெட் விளையாடுவதை நிறைவேற்றி இருக்கிறான்.
பெயர்: ராகுல் சர்மா
பிறந்தது:நவம்பர் 30 1986 ஜலந்தரில்
வாழ்வது: கிரிக்கெட்டிற்காக
பிரச்சனை : பெல்ஸ் பால்சி என்றழைக்கப்படும் முக நரம்பியல் நோய்
ஐ.பி.எல் நுழைந்தவுடன் அதில் இணைந்து தம் திறமையை நிருபித்து இந்தியாவிற்காக விளையாட எண்ணிய பல வீரர்களில் இந்த வைரமும், ஒன்று.
ஆனால் முதல் இரு தொடர்களில் எந்த அணியிலும் விலை போகவில்லை இந்த பஞ்சாப் வீரர். 2010 தொடரில்தான் வாய்ப்பு கிட்டியது. கூடவே பிரச்சனையும் முகத்தில் திடிரென ஒரு பகுதியில் ஏற்பட்ட வலியால், இவரால் தன் ஒரு பக்க கண்ணை மூட இயலவில்லை. ஒரு பக்க முகத்தில் எவ்வித இயக்கமும் இல்லை. இதன் காரணமாக இவரால் இன்று வரை முழுமையாக பேட்டிங் செய்ய இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.
இருந்தபோதிலும் கில்கிறிஸ்டின் ஊக்குவிப்பால் அணி விளையாடும்போது மருந்தும் துண்டுமாக மைதானத்தில் பீல்டிங் செய்ய களமிறங்கினார். ஒவ்வொரு ஓவருக்கு ஒரு முறையும் கண்ணில் மருந்திட்டுக் கொண்டு, கண்ணில் நீர் வருகையில் அதனை துடைத்து கொண்டு விளையாடினார்.
ஆனால் மிக சிறந்த லெக் ஸ்பின்னரான இவர் பந்து வீச தன்னால் இயலவில்லையே என்று ஏங்கினார். 1வருடம் கழிந்தது, இம்முறை தனது பழைய கேப்டன் அணியில் இல்லை. அவரது அணியான பஞ்சாப்பிற்க்காக விளையாட வாய்ப்பு வரும் என்று எண்ணினார். வரவில்லை, மாறாக புதுமுக அணியான புனே வாரியர்சில் இடம் கிடைத்தது.
உலக கோப்பை தொடர் நாயகன் யுவராஜ் சிங்கின் தலைமையிலான அணி. யுவராஜின் கண்ணில் பட்டது இவரது திறமை. தொடரில் புனே வாரியர்ஸ் மண்ணை கவ்வினாலும் ராகுல்தான் ஹீரோ.
என்னை பொறுத்தவரை இந்த தொடரில் மற்ற அனைத்து போலர்களை விடவும் மிக சிறப்பான செயல்பாடு இவருடையதுதான். இவர் அதிக பட்சமாக வசன்கிய ரன்கள் 4 ஓவர்களுக்கு 29 ரன்கள். மலிங்கா கூட இவரளவுக்கு சிக்கனமாக இல்லை.
16 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் மூன்றாம் இடம். மிக சிறப்பான ஆவரேஜ், குறைவான ரன் வழங்கும் விகிதம் என தொடர் முழுவதும் இவரது ராஜ்யம்தான். இவரது அணி கொஞ்சம் ரன்களை குவித்திருந்தால் பல வெற்றிகளை இவரால் சுவைத்து இருக்கும்.
நன்றி
CRICINFO.COM
குட் போஸ்ட்
ReplyDelete