Pages

Saturday, May 21, 2011

ராகுல் சர்மா - நம்பிக்கையின் சின்னம்

உங்களுக்கு முகத்தின் ஒரு பகுதி உணர்ச்சியற்று போகிறது. நீங்கள் என்ன செய்வீர்கள்? சோர்ந்து போய் மூலையில் உட்கார்வீர்கள் அல்லது அதை நினைத்தே புலம்புவீர்கள் அல்லது அந்த பிரச்சனை இல்லாவிட்டால் இமயமலையை கால்களுக்கு கீழே கொண்டு வந்திருப்பேன் என்று வீண் ஜம்பம் செய்வீர்கள்.

உங்கள் வாழ்நாள் ஆசையை நிறைவேற்றி இருப்பீர்களா? 
இதோ ஒரு இளைஞன். தன் வாழ்நாள் ஆசையான கிரிக்கெட் விளையாடுவதை நிறைவேற்றி இருக்கிறான். 

பெயர்: ராகுல் சர்மா 
பிறந்தது:நவம்பர் 30 1986 ஜலந்தரில் 
வாழ்வது: கிரிக்கெட்டிற்காக
பிரச்சனை : பெல்ஸ் பால்சி என்றழைக்கப்படும் முக நரம்பியல் நோய்
ஐ.பி.எல் நுழைந்தவுடன் அதில் இணைந்து தம் திறமையை நிருபித்து இந்தியாவிற்காக விளையாட எண்ணிய பல வீரர்களில் இந்த வைரமும், ஒன்று.

ஆனால் முதல் இரு தொடர்களில் எந்த அணியிலும் விலை போகவில்லை இந்த பஞ்சாப் வீரர். 2010 தொடரில்தான் வாய்ப்பு கிட்டியது. கூடவே பிரச்சனையும் முகத்தில் திடிரென  ஒரு பகுதியில் ஏற்பட்ட வலியால், இவரால்  தன் ஒரு பக்க கண்ணை மூட  இயலவில்லை. ஒரு பக்க முகத்தில் எவ்வித இயக்கமும் இல்லை. இதன் காரணமாக இவரால் இன்று வரை முழுமையாக பேட்டிங் செய்ய இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.

இருந்தபோதிலும் கில்கிறிஸ்டின் ஊக்குவிப்பால் அணி விளையாடும்போது மருந்தும் துண்டுமாக மைதானத்தில் பீல்டிங் செய்ய களமிறங்கினார். ஒவ்வொரு ஓவருக்கு ஒரு முறையும் கண்ணில் மருந்திட்டுக் கொண்டு, கண்ணில் நீர் வருகையில் அதனை துடைத்து கொண்டு விளையாடினார்.

ஆனால் மிக சிறந்த லெக் ஸ்பின்னரான இவர் பந்து வீச தன்னால் இயலவில்லையே என்று ஏங்கினார். 1வருடம் கழிந்தது, இம்முறை தனது பழைய கேப்டன் அணியில் இல்லை. அவரது அணியான பஞ்சாப்பிற்க்காக விளையாட வாய்ப்பு வரும் என்று எண்ணினார். வரவில்லை, மாறாக புதுமுக அணியான புனே வாரியர்சில் இடம் கிடைத்தது.

உலக கோப்பை தொடர் நாயகன் யுவராஜ் சிங்கின் தலைமையிலான அணி. யுவராஜின் கண்ணில் பட்டது இவரது திறமை. தொடரில் புனே வாரியர்ஸ் மண்ணை கவ்வினாலும் ராகுல்தான் ஹீரோ.

என்னை பொறுத்தவரை இந்த தொடரில் மற்ற அனைத்து போலர்களை விடவும் மிக சிறப்பான செயல்பாடு இவருடையதுதான். இவர் அதிக பட்சமாக வசன்கிய ரன்கள் 4 ஓவர்களுக்கு  29 ரன்கள். மலிங்கா கூட இவரளவுக்கு சிக்கனமாக இல்லை.

16 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் மூன்றாம் இடம். மிக சிறப்பான ஆவரேஜ், குறைவான ரன் வழங்கும் விகிதம் என தொடர் முழுவதும் இவரது ராஜ்யம்தான். இவரது அணி கொஞ்சம் ரன்களை குவித்திருந்தால் பல வெற்றிகளை இவரால் சுவைத்து இருக்கும்.

நன்றி 
CRICINFO.COM
    
 

Wednesday, May 18, 2011

வெற்றித் தலைவன் தோணி

இன்றைய விளையாட்டு துறையில் வீரர்களுக்கு காயம் ஏற்படுவது சகஜம் ஆகிவிட்டது .மரியா சரபோவா ,சானியா மிர்சா,லியாண்டர் பயஸ் ,டேவிட் வில்லா,சுக்ராஜ் சிங் ,யுவராஜ் சிங் என வீரர்கள் காயத்தால் அவதிப்படுவது
நாம் அறிந்ததே .

கிரிக்கெட் சமிபகாலமாக அதிகளவில் விளையாடப்பட்டு வருகிறது .
இப்படிப்பட்ட சூழலில் அதிக ஆட்டங்களில் பங்கேற்பதற்காக சென்ற ஆண்டில் நமது கேப்டன் டோனி சென்று வந்துள்ள பயண தூரத்தையும் கேட்டால் நம்மால் நம்ப இயலவில்லை .

கடந்த பதினைந்து மாதங்களில் ஐந்து கண்டங்களில் எட்டு நாடுகளுக்கு கிட்டத்தட்ட ஐம்பது விமானங்களில் 112,000 கிலோமீடேர்கள் பயணம் செய்து
47 ஒரு நாள் போட்டிகள் ,11 டெஸ்ட் போட்டிகள் ,8 இருபது ஓவர் ஆட்டங்கள் என பல போட்டிகளில் பங்கேற்று கலக்கியுள்ளார் .

இவர் இத்தனை போட்டிகளில் பங்கேற்று கலக்கியுள்ளார் என்பது சாதரண விடயம் அல்ல .டெஸ்ட் போட்டிகளில் கூட இவர் விளையாடாமல் தவிர்க்கலாம் .ஆனால் இவர் இல்லாத ஒரு நாள் அணி மாலுமி இல்லாத கப்பல் போல் தவிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இத்தனை போட்டிகளிள் பங்கேற்பதில் என்ன விந்தை என சிலர் கேட்கக்கூடும் .
ஒரு விடயத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் .உலகிலேயே கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் இந்தியா ஒரு நாட்டின் தலைவர் பதவிதான் மிகவும் கடினமானது .உடன் விளையாடும் வீரர்கள் ,ரசிகர்கள்,வாரியத்தை என பலரது விருப்பங்களை பூர்த்தி செய்யவேண்டும் .

இத்தனை போட்டிகளில் சில போட்டிகளில் விளையாடும்போது அவரது கைவிரல்களில் காயம் ஏற்பட்டபோதிலும் ,ஓய்வின்றி தொடர்ந்து ஆடினார்
என்பது குறிப்பிடத்தக்கது.இது குறித்து அவரது சகா ராபின் உத்தப்பா கேட்டபோது டோனி சிறிது கொண்டாரம்.

இவை தான் அந்த வீரனின் வெற்றி ரகசியங்கள் .அவர் அதிர்சடத்தால் வெற்றி பெறுவதாக கூறுபவர்கள் ,அவரது கடின உழைப்பால்தான் அதிர்ஷ்டம் அவர் வசபட்டுள்ளது என்பதை உணரவேண்டும்.

ஆஸ்திரேலிய தலைவர் பாண்டிங் வழக்கம்போல் தனது அணியின் தோல்வியை ஏற்று கொள்ள இயலாமல் நமது அணியின் இருபது ஓவர் உலக கோப்பை வெற்றியையும் குறை கூறி தன் யார் என்பதை மீடியாகளுக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார் .இதனால் டோனியின் புகழ் குறைய போவது இல்லை மாறாக பெருகுகிறது.

இந்தியாவில் பெருநகரங்களில் வாழ்பவர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த கிரிக்கெட்டுக்குள் பின்தங்கிய மாநிலமான ஜார்கண்டில் இருந்து வந்து இன்று இந்தியாவின் மிச்சல் பெவன் என கூறும் அளவிற்கு பெயர் பெற்றுள்ள ஒரு கூலி தொழிலாளியின் மகனது வெற்றி உழைக்கும் வர்கத்திற்கு கிடைத்த வெற்றி.
மிஸ்டர் கூலாக களத்தில் இருக்கும் தோனி பதட்டப்படாமல் ஆட்டத்தை தான் வெல்வதற்கான களமாக எளிதில் மாற்றிவிடுகிறார் .

இதனாலேயே இவருக்கு முன் அணிக்கு வந்த யுவராஜுக்கு அணி தலைவர் பதவி கிடைக்காமல் இவருக்கு கிடைத்தது. அணிக்கு தேவையான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இவரது திறமை இவரது சராசரியை பார்த்தாலே தெரியும் .
சரியான விக்கெட் கீப்பர் கிடைக்காமல் அவதிப்பட்ட இந்திய அணிக்கு இவர் வருகை புது தெம்பை அளித்தது.

கங்குலிக்கு பிறகு அணிக்கு வெற்றி தேடி தரும் ஒரு வலுவான தலைவனாக தோனி உருவெடுத்துள்ளார் எனில் அது மிகை ஆகாது.கபில் டெவில்ஸ் போன்று தற்சமயம் டோனியின் இளைஞர் படை உலகின் எந்த அணியையும் நொறுக்கி தள்ளும் வண்ணம் வலுவாக உள்ளது.

அவரது தலைமை பண்பிற்கு சிறந்த உதரணமாக ஐபிஎல் தொடரில் தனக்கு கிடைத்த சராசரி வீரர்களை கொண்டு இறுதி போட்டி வரை சென்றதை கூறலாம்.
ஃபார்ம் இன்றி தவித்த ரெய்னாவை அதிரடி ஆட்டகாரராக மாற்றி அவரை மேட்ச் வின்னராக மாற்றிய பெருமை தோனியையே சாரும்.

இந்தியாவில் எந்த ஒரு டெஸ்ட் காப்டனும் பெறாத சிறப்பு டோனிக்கு உண்டு அது தான் தலைமை பொறுபேற்ற பின் முதல் மூன்று ஆட்டங்களையும் தொடர்ந்து வென்றதுதான் அது .

இப்படிப்பட்ட தோணி 2011 உலக கோப்பையை வென்றது ஆச்சர்யத்துக்குரியது அல்ல. முழு பார்மில் இருக்கும் யுவராஜுக்கு பதிலாக பைனலில் களமிறங்கிய போது முதலில் பலர் முகம் சுளித்தனர். அப்போது என்னுடன் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த என் நண்பர்களிடம் நான் சொன்னது இதுதான். தோணி தெளிவான முடிவு எடுத்து இறங்கிருக்கான். வலது - இடது பார்ட்னர்ஷிப் மெயிண்டைன் பண்றதுக்குதான் இப்படி இறங்கியிருக்கணும்னு நான் சொன்னேன். அதே மாதிரி காம்பீர் கூட செம கம்பெனி கொடுத்து கலக்குனாப்ல தல.

காம்பீர் அவசரப்பட்டு அவுட் ஆனப்போ காம்பீர விட தோனிதான் ரொம்ப கவலைப்பட்டு இருப்பார். உலக கோப்பை பைனல்ல  சதம் அடிப்பது சாதாரண விசயமா என்ன்?

அப்புறம் யுவராஜ் வந்தவுடனே ஆட்டத்த மெதுவா அதிரடி ஆக்குனாப்ல. மலிங்கா பவுலிங்லே தோனி தெனறுவார்னு எல்லாரும் சொன்னாங்க. ஆனா திணறுனது யுவராஜு. தோனி போட்டாரு இரண்டு ஃபோரு அதோட ஆட்டம் ஜோர் அப்புறம் குலசேகரா பால்லே ஒரு சூப்பர் பினிஷிங் சிக்ஸ் இதுக்கு மேலே ஒரு கேப்டனுக்கு வேற என்ன பெருமை வேணும்.